கோப்புப்படம் 
செய்திகள்

தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா- நான்காயிரத்தை தாண்டிய பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனாவால் சென்னையில் தான் முதலில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து அரசு எடுத்த முயற்சிகளால் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது.

இருப்பினும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.