திருவள்ளூர் மாவட்டம் 
செய்திகள்

திருவள்ளூரில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 173-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.  

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 948 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 984 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 14 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை 603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.