சேலம்:
சேலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 189 பேர் அடங்குவர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 4 பேர் பலியாகினர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த தொப்பூரை சேர்ந்த 65 வயது ஆண், ஏத்தாப்பூரை சேர்ந்த 62 வயது ஆண், மேட்டூரை சேர்ந்த 70 வயது ஆண் என 3 பேர் இன்று காலை அடுத்தடுத்து இறந்தனர்.
இதனால் சேலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் சேலம், ஆத்தூர், மேட்டூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.