கொரோனா வைரஸ் 
செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது.

நெல்லை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 407 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 423 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT