கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,41,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,307-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,256 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 44 பேர் உயிரிழந்துள்ளனர்.