கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்) 
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 14,414 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,128 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,414 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 246 பேர் உயிரிழந்துள்ளனர்.