புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் 
செய்திகள்

புதுவையில் மேலும் 13 கட்டுப்பாட்டு மண்டலம்

புதுவையில் மேலும் 13 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

புதுவையில் கொரோனா பாதித்த நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.சாரம் சக்திநகர் 3-வது குறுக்குத்தெரு, 2.நைனார்மண்டபம் துலுக்கானத்தமன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 3.முருங்கப்பாக்கம் ஜெயமூர்த்தி ராஜா நகர் பாரதியார் சாலை 3-வது குறுக்குத்தெரு, 4.வாணரபேட்டை தாவீதுபேட்டை கல்லறை வீதி, 5.முருங்கப்பாக்கம்- கடலூர் சாலை நைனார்மண்டபம் குயவர் வீதி, 6. சுதானா நகர் வசந்தம் வீதி, 7.தேங்காய்திட்டு பள்ளித்தெரு, 8.கொம்பாக்கம் பாலாஜி நகர் விநாயகர் கோவில் தெரு, 9.உருளையன்பேட்டை அய்யனார் நகர் முதல் குறுக்குத்தெரு, 10.உருளையன்பேட்டை இளங்கோ நகர் 3-வது குறுக்குத்தெரு,

11.சாரம் சக்தி நகர் 9-வது குறுக்குத்தெரு, 12.புதுப்பாளையம் நெல்லித்தோப்பு கண்ணார வீதி, 13.உருளையன்பேட்டை முத்தமிழ் நகர் புளியமரத்து வீதி ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் பொது போக்குவரத்து, பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.