கொரோனா வைரஸ் 
செய்திகள்

இடுக்கி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 10 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மூணாறு:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மத்திய அரசின் கொரோனா பாதித்து உள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. இதற்கு முன்பு இந்த மாவட்டத்தை கேரள அரசு சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் இடுக்கி மாவட்ட மக்களுக்கு பரவக்கூடும் என்று எண்ணி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மூணாறு, எலப்பாறை, வண்டிபெரியார் பகுதிகளை கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதில் 10 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இந்த 10 பேர்களில் எலப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவரும் அடங்குவார். 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் இடுக்கி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT