மும்பை தொழிலாளர்கள் போராட்டம் 
செய்திகள்

சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டம்

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக் கூறி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை:

கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே  3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் ஊரடங்கால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக் கூறி மும்பை பாந்த்ராவில் ஏராளமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பக் கோரி முழுக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT