கொரோனா வைரஸ் 
செய்திகள்

திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி

திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

திருச்சி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் கொரோனாவால் திருச்சி மாவட்டத்தில் 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கோட்டை மதுரம் மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 127 வியாபாரிகளுக்கு நடந்த பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களின் சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.