பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்ட காட்சி. 
செய்திகள்

போச்சம்பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, போச்சம்பள்ளி 4 ரோடு சந்திப்பில் நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. வணிகர் சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பொருளாளர் பாஸ்கர், செயலாளர் ரமேஷ், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.