கலெக்டர் திவ்யதர்ஷினி 
செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது என்று கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

மாலை மலர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 26 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாற்றப்பட்டனர். மீதமுள்ள ஒரு வாலிபர் சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா உறுதியானதையொட்டி இவர்களுடன் தொடர்பில் இருந்த 224 பேரில் 122பேருக்கு இரத்த மாதிரி முடிவுகள் வந்தது. அதில் 114 பேருக்கு கொரோனா பாதிக்காதவர்கள் என முடிவுகள் வந்துள்ளது. 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றொருவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் மேல்விஷாரத்தை சேர்ந்த 3 பேர், அம்மூர் சேர்ந்த 2 பேர், ஆற்காடு சேர்ந்தவர்கள் 3பேர், கல்மேல்குப்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 8 பேருக்கு டெல்லி சென்று வந்தவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டில் இருந்தவர்கள் மற்றொருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் பெங்களூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த 13பேரில் 12 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளது. ஒருவருக்கு மட்டும் ரத்த மாதிரி முடிவுகள் வரவில்லை என கலெக்டர் திவ்யதர்ஷினி கூறினார்.