கோப்பு படம். 
செய்திகள்

உடன்குடியில் ஒரேநாளில் 14 பேருக்கு கொரோனா

உடன்குடியில் ஒரேநாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவதுறையினர் அங்கு முகாமிட்டு மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

மாலை மலர்

உடன்குடி:

உடன்குடி தைக்காவூரில் உள்ள ஒரு தனியார் எண்ணை மில்லில் 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் மில் ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் உடன்குடி சீயோன் நகர், மாநாடு பகுதியில் 2 பெண்களுக்கும், வெள்ளாளன் விளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கும், கல்லாமொழியை சேர்ந்த ஒரு ஆணுக்கும், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

இதுதவிர அப்பகுதியை சேர்ந்த மேலும் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மில் உடனடியாக அடைக்கப்பட்டது. அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனிபிரிமின் தலைமையில் மருத்துவதுறையினர் அங்கு முகாமிட்டு மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுத்துள்ளனர். அப்பகுதியில் சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.