சென்னை
குட்கா விவகாரம் சூடு பிடித்ததை தொடர்ந்து போலீசார் அதனை விற்பனை செய்பவர்கள், பதுக்குபவர்களை கைது செய்யவும் தொடங்கி உள்ளனர். பள்ளிக்கரணை அருகே உள்ள நன்மங்கலத்தில் கிலோ கணக்கில் ‘மாவா’ போதை பொருள் சிக்கியது.
இது தொடர்பாக நீரஜ்சுக்லா என்பவர் பிடிபட்டார். இதேபோல கீழ்ப்பாக்கம் பகுதியிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தி போதை பொருட்களை பிடித்து கொடுப்பார்கள். அதன் பேரில் போலீசில் வழக்கு போடப்படும்.
தற்போது ‘டுபாக்கோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். நன்மங்கலம் பகுதியில் ஏரிக்கரையோரத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி எப்போதும் கிடைப்பதாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.