முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 49-வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த பந்தை பிலிப்பே கவுன்டினோ சிறப்பான வகையில் கோலாக மாற்றினார். லிவர்பூல் அணியில் இருந்து பார்சிலோனாவிற்கு டிரான்ஸ்பர் ஆன இவருக்கு பார்சிலோனா அணிக்கான முதல் கோல் இதுவாகும்.
ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த பந்தை இவான் ராகிடிக் எளிதாக கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. முதல் லெக்கில் 1 கோல் அடித்திருந்ததால் 3-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக ஐந்து முறை பார்சிலோனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.