செய்திகள்

கோபா டெல் ரே - செவியாவை 5-0 என துவம்சம் செய்து பார்சிலோனா சாம்பியன்

கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் செவியாவை 5-0 என வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. #Barcelona

மாலை மலர்

பார்சிலோனா அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 31-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் சுவாரஸ் மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.