செய்திகள்

பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் தலைமை கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்து காவல் துறை உத்தரவிட்டது.

மாலை மலர்

காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் முனாவர் ஹூசைன். இவர் பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.

அதனையடுத்து ஹூசைனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் குடிபோதையில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

ஹூசைன் இது போன்று பல வழக்குகளில் மாட்டியதால் கிஷ்த்வாரிலிருந்து ராம்பன் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.