செய்திகள்

காஷ்மீரில் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூத்த போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூத்த போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகருக்கு அருகாமையில் இருக்கும் குட்ரூ கிராமத்தை சேர்ந்தவர் ஹலீம் குஜ்ஜார்.

அம்மாவட்ட காவல் துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றிவரும் அவரது வீட்டுக்கு இன்று வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.