செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்யும்போது தீப்பிடித்து இளம்பெண் கருகி பலி

வீட்டில் சமையல் செய்யும்போது தீப்பிடித்து இளம்பெண் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள அத்திபாடியைச் சேர்ந்தவர் பிரபு. விவசாயி. இவரது மனைவி லட்சுமி (வயது 24). 

இவர் கடந்த 29-ந் தேதி வீட்டில் சமையலுக்காக அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடுப்புக்கு மேலே சிலாப்பில் இருந்த  மண்எண்ணை கேன் எதிர்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தவறி விழுந்தது. இதில் மண்எண்ணை கேன் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த லட்சுமி மீது மண்எண்ணையுடன் தீப்பற்றி கொண்டது. இதில் அவரது உடல் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.