செய்திகள்

தடாகம் அருகே சமையல் செய்தபோது பிளஸ்-2 மாணவி கருகி பலி

தடாகம் அருகே சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயில் சிக்கி பிளஸ்-2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை தடாகம் இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அபிதா (வயது 17). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

சம்பவத்தன்று அபிதா சமையல் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீ பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த மாணவி அலறி சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அபிதா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 

பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அபிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.