முல்லைப்பெரியாறு அணை 
செய்திகள்

தேனி மாவட்டத்தில் தொடர் மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மாலை மலர்

கூடலூர்:

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் அணைக்கு 1323 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 972 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 60.20 அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியாக உள்ளது. 72 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.60 அடி. 79 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 81.50 அடி. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பகல் பொழுதில் வெயில் அடித்த பொழுதும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரியாறு 10.8, தேக்கடி 12.2, கூடலூர் 14, சண்முகா நதி அணை 7, உத்தமபாளையம் 3.2, வீரபாண்டி 6, வைகை அணை 0.4, கொடைக்கானல் 9.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.