ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் சாலையின் குறுக்கே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்படுத்தப்பட்டது.