நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்த போது எடுத்த படம் 
செய்திகள்

நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி - அமைச்சர் சரோஜா ஆய்வு

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு ரூ.112 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 161 சதுர அடி பரப்பளவில் 5 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.157 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 333 சதுர அடி பரப்பளவில் ஆஸ்பத்திரிக்கான 9 கட்டிடங்களும், ரூ.69 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 998 சதுர அடி பரப்பளவில் 8 இருப்பிட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நேற்று அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்களை பாதுகாப்பாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், காலதாமதம் இன்றி விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.