செய்திகள்

திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் போலீசை எரித்து கொன்ற கான்ஸ்டபிள் கைது

தெலுங்கானாவில் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பெண் போலீசை கான்ஸ்டபிள் எரித்து கொன்றார். இதையடுத்து அந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். #ConstableArrested

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் ராமசந்திரபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணி புரிபவர் மந்தாகினி.  இவர் கடந்த திங்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை சதானந்தம் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சில மாதங்களுக்கு முன் சங்கரெட்டி காவல் நிலையத்தில்  மந்தாகினியும், கான்ஸ்டபிளாக பணிப்புரிந்த பிரகாஷ் ராஜும்  காதலித்து வந்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ் ஏற்கனவே திருமணமானவர். இவர்களுக்குள் இருந்த கள்ளக்காதல், இருவரும் ஹட்னூர் மற்றும் ராமசந்திரபுரம் காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்த பின்னரும் தொடர்ந்துள்ளது.   

கடந்த ஒரு வரமாக மந்தாகினி, பிரகாஷ் ராஜிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால், பிரகாஷ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த திங்கள் இரவு  வேங்கடபுரம் கிராமப்பகுதிக்கு மந்தாகினியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மந்தாகினியின் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பிரகாஷ் ராஜை போலீசார் கைது செய்தனர்.  அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். #ConstableArrested  

SCROLL FOR NEXT