தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் - அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
பாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர்.
மாலை மலர்
பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.