செய்திகள்

மக்களவையில் நடந்த அமளியை படம்பிடித்த பா.ஜ.க. எம்.பி.: காங்கிரஸ் புகார்

மக்களவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டபோது அதனை பா.ஜ.க. எம்.பி. படம் பிடித்தததாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று பா.ஜ.க. உறுப்பினர் மீனாட்சி லேகி பேசும்போது, போபர்ஸ் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர்களை கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்த அமளி காரணமாக அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த 6 எம்.பி.க்களை 5 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்தார் சபாநாயகர்.