பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வழிமுறைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.