புதுச்சேரியில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையே அதிகாரப்போட்டி இருந்து வருகிறது.
மாநிலத்தில் தனக்கு அதிக அதிகாரம் இருப்பதாக கூறும் கவர்னர், ஆளுங்கட்சியை கலந்து ஆலோசிக்காமல், சட்டமன்றத்திற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தார். இதேபோல் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதனால் ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி பிற கட்சிகளும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கவர்னருக்கு எதிராக போராட்டங்களும் நடைபெறுகின்றன.
தூய்மையான கிராமம் என்ற அந்தஸ்து பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என சமீபத்தில் கவர்னர் கிரண்பேடி நிபந்தனை விதித்தார். இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.