செய்திகள்

காரைக்குடி அருகே பணப்பட்டுவாடா செய்த காங்கிரஸ் தொண்டர்கள் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad

காரைக்குடி:

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப் புழக்கத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கவும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சுமதி தலைமையில் பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம், பாலதண்டாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad

SCROLL FOR NEXT