பிரியங்கா காந்தி 
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - டெல்லியில் 10-ம் தேதி காரிய கமிட்டி தீர்மானிக்கும்

ராகுல் காந்தியின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

மாலை மலர்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மிகப்பெரிய தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவருக்கு அடுத்தபடியாக தேசிய தலைவர் பதவியை ஏற்று, அக்கட்சியை சரிவில் இருந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போகும் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது  தீர்மானிக்கப்படவுள்ளது.