செய்திகள்

அஜ்மீர், அல்வார் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர், அல்வார் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். #RajasthanByPolls

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடக்கம் முதலே முன்னிலை பெற்றுள்ளனர். மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேபோல், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். சுமார் 11 மணி அளவில் வெற்றியாளர் யார்? என்பது தெரியவரும். #RajasthanByPolls