காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் களைகட்டியுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான காங்கிரசார் திரண்டு பிறந்தநாளை கொண்டாடினர். மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.