செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று வெளியிட்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தேர்தல் அறிக்கை சுமார் 60 பக்கங்களை கொண்டது. அனைத்து பெண்களுக்கும் வீடுகள் வழங்கப்படும், 24 மணி நேரமும் பேசும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி, பெண்களுக்கான உதவி மையம், பெண்களுக்காக பெண்களே ஓட்டும் வாகனங்கள் அறிமுகம், தொடக்க பள்ளி முதல் கல்லூரி வரையில் மாணவர்களுக்கு இலவச கல்வி, படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு உள்பட பலவேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.