காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி. 
செய்திகள்

ஆலங்காயத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்காயத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

வாணியம்பாடி:

ஆலங்காயம் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண்மை சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் இலியாஸ்கான், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத்அஹமத், மாவட்ட இளைஞரணி தலைவர் பைசல்அமீன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ராஜேஷ், பாப்பையன், வக்கீல் விஷ்வபாரதி, நகர விவசாய அணி தலைவர் கவியரசன், நிர்வாகிகள் முரளி, சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.