பசு, ஒட்டகம் உள்ளிட்ட சில கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 19 ஆண்டுகளாக சைவமாக இருந்த கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பல்ராம், கால்நடை விற்பனை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டார்.
கொச்சியில் நடைபெற்ற மாட்டிறைச்சி திருவிழாவில் கலந்து கொண்ட அவர், மாட்டிறைச்சி சாப்பிட்டத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.