செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கன்னட மக்களை அவமானப்படுத்தியுள்ளது- பா.ஜனதா எம்பி

கர்நாடகா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, கன்னடர்களை அவமானப்படுத்தியுள்ளது என பா.ஜனதா பெண் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். #KarnatakaElections2018

காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏராளமான மொழிப் பிழைகள் (language errors) உள்ளன. இதன்மூலம் கன்னட மக்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியுள்ளது என பா.ஜனதா பெண் எம்.பி.ஆன ஷோபா கரன்ட்லாஜே குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஷோபா கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முற்றிலுமாக அபத்தமானது. ஏராளமான மொழிப் பிழைகள் உள்ளன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கன்னடர்களையும், அவர்களது மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.

சித்தராமையா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்தாரா?. அவர் அதை கட்டாயம் வெளியிட அனுமத்திருக்கக் கூடாது. அவர் தேர்தல் அறிக்கையை வாசிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு கர்நாடக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

SCROLL FOR NEXT