செய்திகள்

சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ம.பி., ராஜஸ்தானில் இழுபறி

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இழுபறியான நிலை உள்ளது. #Results2018 #ChhattisgarhElections

மாலை மலர்

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர்.

குறிப்பாக 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.