புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் ஆசிஷ் குல்கர்னி. இவர் கட்சியின் ஒருங்கிணைப்பு மைய உறுப்பினராக இருந்து வந்தார்.
இவர் திடீரென பதவி விலகி உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அதில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படப்போகிறார் என்று கட்சியின் பிரபலங்கள் வதந்தி பரப்புவதின் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத பிரபலங்கள், மொத்த குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி மீது சுமத்த முயற்சிப்பதாக குறை கூறி உள்ளார்.ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த கட்சியின் பழைய முகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறை கூறி இருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.