சோனியா காந்தி 
செய்திகள்

திடீர் உடல்நலக் குறைவு: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்றிரவு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து பூரண ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட  சோனியா காந்தி இன்றிரவு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.