செய்திகள்

16-ம் ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜிக்கு 21-ந்தேதி காங்கிரசார் மலரஞ்சலி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது புகைப்படத்துக்கு காங்கிரஸ் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கே.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் திலகம் சிவாஜியின் 16-ம் ஆண்டு நினைவு தினம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அல்லது பொது இடத்தில், நடிகர் திலகத்தின் புகைப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

சென்னையில், 21-ந்தேதி காலை 8 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாட வீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள, சிவாஜி சிலைக்கு, தொண்டர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 11 .00 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT