காங்கிரஸ் 
செய்திகள்

கரூரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

கரூர்:

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் ஆர் எம் எஸ் அலுவலகம் அருகே நடந்தது. 

மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி சிறப்புரையாற்றினார். 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் பாபு, மணி, வர்த்தகப் பிரிவு சதீஷ், நகர செயலாளர் சவுந்திரராஜன் வட்டாரத் தலைவர்கள் குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.