பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.