எபோலா வைரஸ் 
செய்திகள்

காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு - 4 பேர் பலி

காங்கோ நாட்டில் 6 பேருக்கு மீண்டும் எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

மாலை மலர்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று பரவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் வங்காட்டா பிராந்தியத்தில் 6 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.