செய்திகள்

நாகலாந்து சட்டசபை தேர்தல்: 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

நாகலாந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. #Congress #Nagaland #AssemblyElection

மாலை மலர்

புதுடெல்லி:

நாகலாந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் ஆஸ்கர் பெர்னான்டஸ் கூறுகையில்,

தீமாப்பூர் -1 ல் கோலியோ காபோ, தீமாபூர்-3 ல் கமின்லுங் துங்லாங்கும், தெற்கு அங்காமியில் நகாகுல் தேஸ் உள்பட 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  

கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருவதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. #congress #NagalandAssemblypolls #tamilnews