சரக்கு வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கும் காட்சி. 
செய்திகள்

இருதரப்பினர் மோதல்: சரக்கு வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

வேடசந்தூர் அருகே இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 3 சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர்களுக்கும், எரியோடு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் இவர்களுக்கிடையே எரியோடு பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற 3 சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் எதிரொலியாக, எரியோடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.