கோப்புபடம் 
செய்திகள்

விக்கிரமங்கலம் அருகே இடப்பிரச்சினையில் மோதல் - ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது வழக்கு

விக்கிரமங்கலம் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் காஞ்சி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கமணி(47). ஊராட்சி மன்ற உறுப்பினராக சங்கர் இருந்து வருகிறார். காஞ்சி கொட்டாய் கிராம மக்களுக்கு குடிநீர் தொட்டி அமைப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து சுத்தம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த தங்கமணி, அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது என்றும் தடுத்துள்ளார். 

அப்போது சங்கருக்கும், தங்கமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில், சங்கர் கொடுத்த புகாரின்பேரில் தங்கமணி மீதும், தங்கமணி கொடுத்த புகாரின்பேரில் சங்கர் மற்றும் அவருடைய நண்பர் ஆதிமூலம்(40) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.