செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து ஆதரவை கேட்கட்டும்- தம்பிதுரைக்கு திருநாவுக்கரசர் பதில்

பாராளுமன்றத்தில் முதலில் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதன் பின்னர் ஆதரவை கேட்கட்டும் என்று தம்பிதுரைக்கு திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் என்றும் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு அ.தி.மு.க.வில் எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. முதலில் தீர்மானத்தை தாக்கல் செய்து அனுமதி வாங்குங்கள். அதன்பிறகு மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேளுங்கள். காங்கிரசிடமும் ஆதரவு கேட்டு வாருங்கள். காங்கிரஸ் அதுபற்றி பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews