கோப்புபடம் 
செய்திகள்

ஓசூரில் சிறுமி கடத்தல் - பெயிண்டர் மீது புகார்

ஓசூரில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் பெயிண்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஓசூர்:

ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பெயிண்டர் குரு (வயது 22) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். 

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.