கோப்புபடம் 
செய்திகள்

பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல் - 7 பேர் மீது புகார்

பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி கடத்திய சம்பவம் குறித்து 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி பிளஸ்-2 படிப்பை தற்போது முடித்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதில் சுப்பிரமணி (வயது 20) என்ற வாலிபர் மற்றும் அவருடைய நண்பர்கள் என 7 பேர் தங்கள் மகளை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.