திருப்பூர்:
கொரோனா தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பெட்ரோல் ,டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டையார் நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனம் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்புகளை பார்வைக்கு வைத்தும் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர்.
மேலும் கொரோனா தொற்று இன்னும் நம்மிடையே இருப்பதை உணர்த்தும் வகையில் கொரோனா வேடமிட்ட ஒருவரையும், மருத்துவர், செவிலியர் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பி.பி.இ., கிட் உடை அணிந்தவர்களை நிறுத்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.